இயக்குனர் ஷங்கரின் மருமகன் எடுத்த முடிவு

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனும் , மதுரை பாந்தா கிரிக்கெட் அணியின் உரிமையாளரின் மகனுமான ரோகித்துக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கிரிக்கெட் பயிற்சிக்காக அந்த கிளப்பிற்கு வந்த 16 வயது இளம் பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய காரணத்திற்காக பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் மீது பாலியல் பிரிவிலும், மற்றொரு பயிற்சியாளர் ஜெயக்குமார், கிரிக்கெட் சங்கத் தலைவர் தாமோதரன், அவரது மகன் ரோஹித் (இயக்குநர் ஷங்கரின் மருமகன்) செயலாளர் வெங்கட், உள்ளிட்டவர்கள் மீது தவறுக்கு உடந்தையாக இருந்ததாகவும் போக்சோ பிரிவின்கீழ் மேட்டுப்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது ரோகித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார்.

அதில், நான் ஆழமாக யோசித்து தான் இந்த முடிவை எடுத்து உள்ளேன். கிரிக்கெட் விளையாட்டுதான் எனக்கு அங்கீகாரத்தையும் ஒரு அடையாளத்தையும் கொடுத்தது. என்னுடைய வாழ்வில் முக்கிய அங்கமான கிரிக்கெட்டுக்கு நான் உண்மையாகவும், நேர்மையாகவும் இருந்து வந்துள்ளேன். ஆனபோதிலும் கடந்த சில மாதங்களாக நடந்த ஒரு சம்பவம் என் மன அமைதியையும் எனது நற்பெயரையும் கெடுத்து விட்டது. அந்த மன உளைச்சலில் இருந்து என்னை மீட்பதற்காக முயற்சித்து வருகிறேன். இந்த நிலையில் தற்காலிகமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். என்னை உருவாக்கிய கிரிக்கெட்டிற்கும் அவதூறு நேரங்களில் எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த முடிவு கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.