உலக பக்கவாத எதிர்ப்பு தினம் World Stroke Day:இன்றாகும்.
உலகத்தில் மக்கள் இறப்பதற்கு முக்கியமான நோய்களின் ஒன்றாக இருக்கிறது பக்கவாதம். மாரடைப்புக்கு அடுத்தபடியாக உயிரை பறிக்கக்கூடிய நோயாக பக்கவாதம் இருப்பதால், இந்த நோய் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
2006ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் அக்டோபர் 29 அன்று உலக பக்கவாதம் தினம் அனுசரிக்கப்படுகிறது.
இரத்த நாளங்களில் அடைப்பு உண்டாகி, ரத்தவோட்டம் குறைவதால் மூளையின் பாகங்கள் செயல் இழப்பதை பொதுவாக பக்கவாதம் என்கிறார்கள்.
மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களில் கசிவு ஏற்படுவதாலும் பக்கவாதம் ஏற்படுகிறது. பக்கவாதம் இரண்டு வகைப்படும். மூளைக்குப் செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவது Ischemic stroke என்று அழைக்கப்படுகிறது. ரத்தக் கொதிப்பினால் மூளைக்குப் போகும் ரத்தக்குழாய் வெடிப்பதால் மூளையில் ரத்தக்கசிவு ஏற்படுவதை Hemorrahagic Stroke என்று அழைக்கின்றனர்.
இன்று இளம் வயதினருக்கும் பக்கவாதம் ஏற்படுகிறது.
நோய்க்கான அறிகுறிகளை இனங்காண்போம் எனும் தொனிப்பொருளில் இம்முறை குறித்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
மொபைலைப் பயன்படுத்தும் நேரம், டிஜிட்டல் ஸ்கிரீன் டைம் என்று அழைப்பார்கள், அது மூளை பக்கவாதம் போன்ற ஆபத்தான நோயை உண்டாக்கும். மொபைலால் ஏற்படும் பக்கவாதத்திற்கான ஆபத்தை எப்படி குறைக்கலாம்?
பல மணி நேரங்களுக்கு மேல் மொபைல் போனை பயன்படுத்துவதால் இயங்குவதால் பக்கவாதம் வரலாம் என்று மூத்த ஆலோசகர் டாக்டர் மணீஷ் குப்தா கூறுகிறார். எந்த ஒரு வேலையைச் செய்வதிலும் நமக்கு மகிழ்ச்சி ஏற்படும் போது, அது நமது மூளையில் டோபமைன் சுரப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.