கடந்த 23ஆம் தேதி நடந்த கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் பலியானார். இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையில் 75 கிலோ வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஆறு பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கோவை காருக்கு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க ஸ்டாலின் பரிந்துரைத்தார். இதனை ஏற்ற உள்துறை அமைச்சகம் சம்பவத்தை விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்புக்கு உத்தரவிட்டது.
கோவை கார் வெடிப்பு வழக்கு தொடர்பான என்ஐஏ விசாரணை அதிகாரியாக காவல் ஆய்வாளர் விக்னேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் என்ஐஏ சார்பாக புதிய முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விக்னேஷ் தலைமையில் விசாரணை நடைபெறும். தமிழக காவல்துறையினரால் சேகரிக்கப்பட்ட தடையங்கள் மற்றும் ஆதாரங்கள் என்ஐஏ வசம் ஒப்படைக்கப்படும். இந்த வழக்கு பூந்தமல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.