சமூக சமையலறை திட்டத்துடன் ஜனாதிபதி ஊடகப் பிரிவும் இணைந்துகொண்டது

உணவு கிடைப்பதில் சிரமத்திற்கு உள்ளாகும் இந்நாட்டு பிரஜைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “சமூக சமையலறை” திட்டத்துடன் ஜனாதிபதி ஊடகப் பிரிவும் இணைந்து கொண்டது.

ராஜகிரிய சனசமூக சேவை நிலையத்தில் நடத்தப்பட்டு வருகின்ற சமூக சமையலறை வேலைத்திட்டத்துடன், நேற்று (28) ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ஊழியர்கள் இணைந்து சமைத்த மதிய உணவை விநியோகித்ததுடன், 400 பேருக்கும் மேற்பட்டோர் சமூக சமையலறையிலிருந்து மதிய உணவை பெற்றுக் கொண்டனர்.ஜனாதிபதி ஊடகப் பிரிவின் நலன்புரிச் சங்கம் இதற்கான நிதி வசதிகளை வழங்கியதுடன், சமூக சமையலறைக் கருத்தை அரச மற்றும் தனியார் நிறுவன மட்டத்தில் பரப்புவதே இதன் நோக்கமாகும்.

313099962 490070809819211 875598358153526944 nஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் கருத்தின்படி உணவுப் பாதுகாப்பையும் போஷாக்கையும் உறுதிப்படுத்துவதற்காக கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுவூட்டுவதற்காக பல் துறை கூட்டுப் பொறிமுறை அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் சமூக சமையலறைத் திட்டம் தொடர்பில் சமூகத்தில் பரந்த கருத்துப் பரிமாற்றம் ஏற்பட்டது.

312230068 490070966485862 3047754146988305901 nசமூக சமையலறை கருத்தின் நோக்கம் வரவிருக்கும் உணவு நெருக்கடிக்கு தயார்படுத்துவதும், ஒரு குழுவாக சத்தான உணவை தயார் செய்வதும், உணவுப் பற்றாக்குறையால் அவதிப்படுபவர்களுக்கு ஆதரவளிப்பதும் ஆகும்.

312616495 490070789819213 5438293686201403275 nஇந்நிகழ்வில், ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சுதீர நிலங்க விதான, ஆசிரியர் பீடப் பணிப்பாளர் பியசேன திஸாநாயக்க, புகைப்படப் பணிப்பாளர் மீஷா குணவர்தன, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் நலன்புரி மற்றும் விளையாட்டு சங்கத்தின் தலைவி, பிரதிப் பணிப்பாளர் தீப்தி பிரமிதா உள்ளிட்ட அதிகாரிகளும் பணிக்குழாமினரும் கலந்துகொண்டனர்.

PMD

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.