திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு பாராட்டு சான்றிதழ்

உற்பத்தி திறன் போட்டியில் ,திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு பாராட்டு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

2020/2021 ம் ஆண்டு தேசிய உற்பத்தி திறன் செயலகத்தினால் நடத்தப்பட்ட இந்த போட்டியிலேயே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

விருது வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (27) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன் போது மாவட்ட செயலகம் சார்பாக மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழினை பெற்றுக்கொண்டார்.

313345855 431288312501164 4964951700589985132 nபாராட்டு சான்றிதழ் நேற்று (28) மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரமவிடம் கையளிக்கப்பட்டது.

மாவட்ட செயலகம் முதல்தடவையாக இவ்வாறானதொரு போட்டியில் கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழை பெற்றமை வரவேற்கத்தக்கது என்றும் முன்னாள் அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலில் இப்பாராட்டு சான்றிதழை பெற ஒன்றிணைந்து செயற்பட்ட உத்தியோகத்தர்கள் அனைவரையும் பாராட்டுவதாக இதன் போது அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம தெரிவித்தார்

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.