திருவள்ளூரில் பரிதாபம்… தாயின் கண்முன்னே மகனுக்கு நேர்ந்த கொடுமை.!

சோழவரம் அருகே பால் வியாபாரியை தாயின் கண்முன்னே இரு சக்கர வாகனத்தில் கடத்திச்சென்று தலை, முகம், மர்ம உறுப்பில் சரமாரியாக தாக்கியதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த எடப்பாளையம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் முரளி (23). இவர் மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். நேற்று முரளி தமது தாயுடன் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தபோது அங்குவந்த கும்பல் ஒன்று தாயின் கண்முன்னே முரளியை இரு சக்கர வாகனத்தில் கடத்திச் சென்றுள்ளது. அப்போது அவரது தாய் அலறியடித்தபடி அருகில் இருந்தவர்கள் துணையுடன் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தபோது சோழவரம் ஏரியின் பின்புறத்தில் உள்ள அலமாதி ஏரியில் தலை, முகம், மர்ம உறுப்பில் சரமாரியாக தாக்கியதில் படுகாயங்களுடன் அவர் கிடந்தது தெரியவந்துள்ளது.
image
கிராம மக்கள் உதவியுடன் மகனை தேடிய தாய் வச்சலா ஏரியில் காயங்களுடன் கிடந்த மகன் முரளியை மீட்டு அலமாதி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுசென்று அங்கிருந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி முரளி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
image
இதனையடுத்து கொலைவழக்கு பதிவுசெய்த சோழவரம் போலீசார் திலீப், தீபன், ஆறுமுகம், நவீன் ஆகிய 4 பேரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரு சக்கர வாகனத்தை நிறுத்துவதில் ஏற்பட்ட முன் விரோதம் கொலைக்கு காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
imageSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.