மாத்தறை திஹகொட பிரதேசத்தில் சிறுவர் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட திஹகொட பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
55 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் இன்று (29) மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் நவம்பர் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று (28) மாலை இடம்பெற்ற இந்த சம்பவ இடத்திற்கு தென் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன சென்றிருந்தார். பொலிஸ் தரப்பில் தவறு இடம்பெற்றிருப்பின், நியாயம் பெற்றுத் தருவதாக அவர் மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார்.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 15 வயதுடைய சிறுவன் காலி கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின்; அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.