துயரத்தில் முடிந்த ஹாலோவீன் கொண்டாட்டம்… டசின் கணக்கானோருக்கு மாரடைப்பு: வெளிவரும் அதிர்ச்சி தகவல்


சம்பவப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் சுமார் 100 பேர்களுக்கு CPR அளித்துள்ளனர்.

சம்பவம் நடந்த பகுதியில் சுமார் 100,000 மக்கள் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக தகவல்

தென் கொரிய தலைநகர் சியோலில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின் இடையே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய டசின் கணக்கானோர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை அடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் சுமார் 100 பேர்களுக்கு CPR அளித்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி இரவு 11.30 மணியளவில் நடந்த இச்சம்பவம் தொடர்பில் முழுமையான தகவல் இதுவரை வெளியாகவில்லை.

துயரத்தில் முடிந்த ஹாலோவீன் கொண்டாட்டம்... டசின் கணக்கானோருக்கு மாரடைப்பு: வெளிவரும் அதிர்ச்சி தகவல் | Halloween Stampede Dozens Collapse In Seoul

@twitter

சமூக ஊடகங்களில் பகிரப்படும் காட்சிகளில், பல எண்ணிக்கையிலான மக்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் வெளியாகியுள்ள காட்சிகளில் உண்மைத்தன்மை உறுதி செய்யப்படவில்லை என்றே அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, சம்பவப்பகுதிக்கு அவசர மருத்துவ உதவிக்குழுக்களை அனுப்பி வைக்க ஜனாதிபதி Yoon Suk-yeol உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மருத்துவமனைகளில் அவசர படுக்கை வசதிகளை ஏற்பாடு செய்யவும் ஜனாதிபதி அலுவலகம் உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

துயரத்தில் முடிந்த ஹாலோவீன் கொண்டாட்டம்... டசின் கணக்கானோருக்கு மாரடைப்பு: வெளிவரும் அதிர்ச்சி தகவல் | Halloween Stampede Dozens Collapse In Seoul

@twitter

முதற்கட்ட தகவலில் சுமார் 100 பேர் மூச்சுத்திணறலால் அவதிக்குள்ளானதாக அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளது.
மேலும், சம்பவம் நடந்த பகுதியில் சுமார் 100,000 மக்கள் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும்,

கொரோனா ஊரடங்குகளுக்கு பின்னர் மாஸ்க் கட்டுப்பாடுகள் இல்லாத முதல் கொண்டாட்டம் இதுவெனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்திருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் அதிகாரிகள் தரப்பில் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.