4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்தார் எமி : சென்னையில் படப்பிடிப்பு

மதராசபட்டினம் படத்தில் நடித்த லண்டன் மாடல் அழகியான எமி ஜாக்சன். அதன்பிறகு தென்னிந்திய படங்கள், பாலிவுட் படங்களில் ஒரு ரவுண்ட் அடித்து விட்டு மீண்டும் லண்டனில் செட்டிலாகிவிட்டார். அங்கு திருமணம் செய்யாமலேயே குழந்தையும் பெற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் அவரை மீண்டும் அழைத்து வந்திருக்கிறார் அறிமுகப்படுத்திய ஏ.எல்.விஜய். அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் அருண் விஜய் ஜோடியாக நடிக்கிறார். நிவீஷா விஜயன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்புகள் லண்டனில் முடிவடைந்து விட்ட நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி உள்ளது.

படப்பிடிப்புக்காக சுமார் 3 கோடி செலவில் லண்டன் சிறை ஷெட் போடப்பட்டிருப்பதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது. சென்னையின் பின்னி மில்ஸ் பகுதியில் 2.5 ஏக்கர் பரப்பளவில் கலை இயக்குநர் சரவணன் நூற்றுக்கணக்கான வேலைப்பாடுகள் மற்றும் ஆட்களுடன் லண்டன் சிறையை மறு உருவாக்கம் செய்திருக்கிறார். இந்த ஷெட்யூலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டைச் சேர்ந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் இதில் பங்கேற்க இருக்கின்றனர். இவர்களுடன் அருண் விஜய் பங்கேற்கக் கூடிய ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. 4 வருடங்களுக்கு பிறகு தமிழ் மண்ணில் மீண்டும் நடிக்கிறார் எமி ஜாக்சன்.

பணி நிமித்தமாக லண்டன் செல்லும் அருண் விஜய் அங்கு எமி ஜாக்சனை சந்தித்து காதல் கொள்கிறார். லண்டனில் ஒரு சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டு சிறை செல்லும் அருண் விஜய்யை, எமி ஜாக்சன் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை என்கிறார்கள். லண்டன் நகரில் அருண் விஜய், எமி காதல் காட்சிகள், சண்டை காட்சிகள் படமாகி விட்டது. லண்டன் சிறையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்காததால் சென்னையில் ஷெட் போட்டு படமாக்குவதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.