திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பேருந்து நிலையத்தில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட இரு நண்பர்கள் மது பாட்டிலை உடைத்து மாறி மாறி குத்திக் கொண்டனர்.
அனுமந்தபுரத்தைச் சேர்ந்த ஜெகன் என்ற லோகேஷ் மற்றும் ஸ்டாலின் நகரைச் சேர்ந்த குமரேசன் ஆகியோர் நண்பர்களாவர்.
இவர்கள் இருவரும் நேற்று காலை முதல் மாலை வரை தொடர்ச்சியாக மது குடித்த நிலையில் தகராறு ஏற்பட்டதை அடுத்து மது பாட்டில்களை உடைத்து மாறி மாறி குத்திக் கொண்டதில் ரத்த காயமடைந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.