காரைக்கால் அரசலாறு முகத்துவாரத்தில் பாறை மீது மீன்பிடி படகு தரை தட்டியது.
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடல் வழக்கத்து மீறாக சீற்றாமக காணப்பட்டு வருகிறது. நேற்றும் கடல் அதிக கொந்தளிப்புடன் காணப்பட்டது.
இந்நிலையில் தரங்கம்பாடி பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடலுக்கு சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, திடீரென்று படகு இன்ஜின் பழுதடைந்தது.
நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களையும் பழுதான படகையும் காரைக்கால் மீனவர்கள் உதவியுடன் மீன்பிடி துறைமுகத்திற்கு நேற்று இரவு கொண்டு வந்தனர். அப்போது அரசலாறு முகத்துவாரத்தில் உள்ள பாறையில் மோதியதில் படகு தரைதட்டியது
படகை கரைக்குக்கு கொண்டு முயற்சியில் மீனவர்கள் பல மணி நேரம் ஈடுபட்டனர். மீன்பிடி துறை முகத்தை தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement