விரைவில் மைசூர் – தூத்துக்குடி இடையே சிறப்பு கட்டண ரயில்! எப்போது தொடங்குகிறது தெரியுமா?

மைசூர் – தூத்துக்குடி இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுவதாக தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மைசூர் தூத்துக்குடி இடையே சிறப்பு கட்டண ரயிலை இயக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி மைசூர் – தூத்துக்குடி சிறப்பு கட்டண ரயில் வரும் நவம்பர் 04, 11, 18 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் மைசூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 05.00 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும். மறு மார்க்கத்தில் தூத்துக்குடி – மைசூர் சிறப்பு கட்டண ரயில் நவம்பர் 05, 12, 19 ஆகிய சனிக்கிழமைகளில் மாலை 03.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.30 மணிக்கு மைசூர் சென்று சேரும்.
தமிழகத்தில் ரயில்கள் இயக்கப்பட வாய்ப்பில்லை? : தெற்கு ரயில்வே தகவல் |  Southern Railway said Will the train bookers be refunded |  Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News ...
இந்த ரயில்கள் யெலியூர், மாண்டியா, பெங்களூர், பெங்களூர் கண்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் இணைக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.