புதுடெல்லி: குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று கூறியதாவது:
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆராய மாநில பாஜக அரசு குழு அமைக்க முடிவெடுத்துள்ளது. அரசியலமைப்பு சட்டப் பிரிவு 44-ல், பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டியது அரசின் கடமை என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதற்கு நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரிடமும் கருத்துகளை கேட்டு, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
ஆனால், அதை ஏன் நாடு முழுவதும் கொண்டு வர பாஜக நடவடிக்கை எடுக்கவில்லை? வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்காக பாஜக காத்திருக்கிறதா? இவ்வாறு கேஜ்ரிவால் கூறினார்.