ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களினால் மக்கள் நலன் சார்ந்த எனது திட்டங்களை தடுத்து நிறுத்தி விடமுடியாது – கடற்றொழில் அமைச்சர்

ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களினாலும் பொய்யான பிரச்சாரங்களினாலும் மக்கள் நலன் சார்ந்த எனது திட்டங்களை தடுத்து நிறுத்தி விடமுடியாது என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் கடலட்டைப் பண்ணை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்களில் ஒரு பகுதியினரை இன்று (02) சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் நடைமுறை பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

கடலட்டைப் பண்ணைகளுக்கு விண்ணப்பம் செய்த சிலர் நடைமுறைச் பிரச்சினைகள் காணமாக இதுவரை கிடைக்காத நிலையில் அவர்கள் கடற்றொழிலாளர்களின் சமாசங்களின் பெயரால் கடலட்டைப் பண்ணைகளுக்கு எதிராக பொய்யான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் போது, அவை மக்களின் மனங்களில் ஆழமான கருத்துக்களாக பதிந்துவிடும் என்ற ஜேர்மனிய சர்வாதிகாரி ஹிட்லரின் கோட்பாடுகளில் ஒன்றை சுட்டிக்காட்டிய கடற்றொழில் அமைச்சர், கடலட்டை பண்ணைகள் பற்றிய உண்மைகள் மக்கள் மத்தியில் தெளிவாக எடுத்துச் செல்லப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.