ஆயுள் காப்பீடு தொகைக்காக…கர்ப்பிணி மனைவியை மலை உச்சியில் இருந்து தள்ளிய கணவன்


25,000 டாலர் மதிப்பிலான ஆயுள் காப்பீடு தொகைக்காக கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவன்.


30 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்தது நீதிமன்றம்.

துருக்கியில் ஆயுள் காப்பீடு தொகைக்காக கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவனுக்கு 30 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 2018 ல் ஹக்கன் அய்சால் ( Hakan Aysal) என்ற கணவர் ஏழு மாத கர்ப்பிணியான தனது மனைவி செம்ரா அய்சாலை (Semra Aysal) துருக்கி மாகாணமான முகலாவில் உள்ள பட்டர்ஃபிளை பள்ளத்தாக்கிற்கு  அழைத்து சென்றுள்ளார்.

அங்கு தனது கர்ப்பிணி மனைவியுடன் மகிழ்ச்சியாக செல்பி எடுத்த கணவர் ஹக்கன் அய்சால், சிறிது நேரத்திலேயே மனைவியை 1000 அடி குன்றிலிருந்து கீழே தள்ளி விட்டுள்ளார்.

ஆயுள் காப்பீடு தொகைக்காக…கர்ப்பிணி மனைவியை மலை உச்சியில் இருந்து தள்ளிய கணவன் | Turkish Man Killing Pregnant Wife For Insurance

மனைவி செம்ரா அய்சாலின் 25,000 டாலர் மதிப்பிலான ஆயுள் காப்பீட்டு தொகை அவரது மரணத்திற்கு பிறகு விரைவாக பெறுவதற்காக கணவர் ஹக்கன் அய்சால் இவ்வாறு செய்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு கணவர் ஹக்கனின் அமைதியான போக்கு குடும்ப உறுப்பினர்களின் சந்தேகத்தை தூண்டி, செம்ராவின் இறப்பு திட்டமிட்டு நடத்தப்பட்டதாக நம்புவதற்கு வழிவகுத்தது.

கூடுதல் செய்திகளுக்கு: கைநழுவிய போனுக்காக… 40 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த அழகிய இளம்பெண்: அதிர்ச்சி வீடியோ!

இதையடுத்து செம்ராவின் மரணம் குறித்து பொலிசார் விசாரணையை  அறிவித்தனர், இதனால் மனைவி இறந்த பிறகு ஆயுள் காப்பீடு தொகைக்காக விண்ணப்பித்து இருந்த கணவர் ஹக்கனின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

ஆயுள் காப்பீடு தொகைக்காக…கர்ப்பிணி மனைவியை மலை உச்சியில் இருந்து தள்ளிய கணவன் | Turkish Man Killing Pregnant Wife For Insurance

இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் கணவர் ஹக்கன் அய்சாலை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 30 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்துள்ளது.

ஆயுள் காப்பீடு தொகைக்காக…கர்ப்பிணி மனைவியை மலை உச்சியில் இருந்து தள்ளிய கணவன் | Turkish Man Killing Pregnant Wife For Insurance



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.