இறக்குமதி வரையறையை தளர்த்துவது குறித்து அடுத்த வாரம் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படவிருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
வாகன உதிரி பாகங்கள், தெரிவு செய்யப்பட்ட அலங்கார தயாரிப்புகள் மற்றும் ஏற்றுமதி தொடர்புப்பட்ட தேவையான பொருட்கள் உள்ளிட்டவற்றின் இறக்குமதி வரையறை இதன் கீழ் தளர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இத்துறையுடன் தொடர்புப்பட்ட பிரதிநிதிகள் அமைச்சிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.