ஆட்சியர் குடியிருப்பு வளாகத்தில் சிறுத்தை ஒன்று நடமாடும் சிசிடிவி பதிவுகள் வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அதனால், வனத்துறையினர் சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்கத் திட்டமிட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் குடியிருப்பு வளாகம் மற்றும் தமிழக விருந்தினர் மாளிகை வளாகங்களில் சிறுத்தையின் நடமாடுவதாக வனத்துறைக்குப் புகார் வந்தது.
இந்தப் புகார் குறித்து, சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது சிறுத்தையானது கடந்த மூன்று நாட்களில் இரவு வேளையில் பலமுறை நடமாடியது தெரிய வந்தது.
இரவு வேளையில் உலா வரும் சிறுத்தையைக் கண்காணித்து கூண்டு வைத்துப் பிடிப்பதற்காக வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.