கெப்பட்டிகொல்லாவ பொலிஸ் உத்தியோகத்தரின் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 15 பேர் கைது

காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி கிராமவாசி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கெப்பட்டிகொல்லாவ, ரம்பகெப்புவாவ கிராம மக்கள் கடந்த 31 ஆம் திகதி இரவு அமைதியின்மையை ஏற்படுத்தி கெப்பட்டிகொல்லாவ பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை காயப்படுத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக தேரர் ஒருவர் உட்பட 15 கிராமவாசிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களில் 2 பெண்களும் அடங்குவர் , இந்த கொலையுடன் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

மக்களை தூண்டிவிட்டு, பொலிஸாருடன் மோதச் செய்ததாக கூறப்படும் கெப்பட்டிகொல்லாவ, ரம்பகெப்புவவ பிரதேசத்தின் போதிருக்காராம விகாரையின் 29 வயதுடைய தேரர் உட்பட 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த விகாரையில் இந்த தேரர் மாத்திரமே தங்கியுள்ளார். இவர் சில காலம் இராணுவத்தில் கடமையாற்றி அதிலிருந்து விலகியதன் பின்னர் பிக்குவாக மாறியுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தேரர் மற்றும் குறித்த விகாரையில் உள்ள உதவியாளர் உட்பட நால்வர் கடந்த 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனைய சந்தேகநபர்கள் நேற்று (01) கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், இலக்கம் 43/A, டயஸ் வத்த, மல்வான, வாரியபொல என்ற முகவரியில் வசித்து வந்த பொலிஸ் உத்தியோகத்தரான ஏ.பி. சுனில் (12601) என்ற 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த அதிகாரியின் தலையில் தடியால் தாக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.