சுற்றாடல் அமைச்சரும் பொறியிலாளருமான நஸீர் அஹமதின் யோசனைக்கு இணங்க அமைச்சின் செயலாளர் அனில் ஜயசிங்க வின் வழிகாட்டலில் e – நூலகம் மக்கள் பயன்பாட்டிற்காக வழங்கும் நிகழ்வு சுற்றாடல் அமைச்சில் இடம்பெற்றது.
தொழில்நுட்ப உலக மற்றும் அதற்கு முகங்கொடுப்பதற்காக இலகு மற்றும் உடனடி சுற்றாடல் வெளியீடுகளை பரிசீலனை செய்வதை இலகு படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த e – நூலகம், தொழில்நுட்பம் முன்னேற்றமடையும் உலகில் முன்னோக்கிய பயணத்தினதும், சுற்றாடலை விரும்பும் மற்றும் சுற்றாடல் தொடர்பான அறிவைத் தேடும் ஆய்வாளர்களுக்கு இந்நூலகம் பாரிய பங்களிப்பைச் செய்யும் என அமைச்சர் சுற்றாடல் அமைச்சரும் பொறியிலாளருமான நஸீர் அஹமத் இந்நிகல்வின் போது தெரிவித்தார்.
மாணவர்களுக்கு புத்தகங்களை உசாத்துணை செய்வதை இலகுவாக மற்றும் நேர முகாமைத்துவத்துடன் மேற்கொள்ள இந்நூலகம் அறிமுகப்படுத்தப்படுவது எமக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர் நஸீர் அஹமத் குறிப்பிட்டார்.
fathima nasriya/AKM