சென்னை: சென்னை, சைதாப்பேட்டையில் அரசு அலுவலர்கள் பயன்பாட்டிற்காக 2,28,984 சதுர அடி பரப்பளவில், ரூ.99.76 கோடி மதிப்பீட்டுச் செலவில் 190 குடியிருப்புகள் கொண்ட 19 தளங்களுடன் ‘சி’ வகை ஒரு புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் கட்டுவதற்கு அரசு ஆணையிட்டுள்ளது. இது தொடர்பாக முன்னரே தமிழ்நாடு சட்டபேரவையில் 12.4.2022 அன்று நடைபெற்ற பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் எ.வ. வேலு அறிவித்திருந்தார்.
