கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு தேவையாயின், அதற்கேற்ப நடத்தப்படும் சைனோபார்ம் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் தொடர்புடைய சுகாதார அதிகாரிகளுடன் தொடர்புகளை மேற்கொண்டு அதனை பெற்றுக்கொள்ளுமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
எமது செய்தி பிரிவுக்கு இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கொவிட் தடுப்பூசி மத்திய நிலையங்கள் தற்பொழுது செயற்படுவதில்லை. எவரேனும் இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு தேவையாயின் சுகாதார வைத்திய அதிகாரியை தொடர்பு கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்தார்.
சுமார் 6 மில்லியன் பைசர் தடுப்பூசி காலவதியாகியிருப்பதாகவும், தற்பொழுது 4 ஆவது தடுப்பூசியை 2 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பெற்றுக் கொண்டிருப்பதாகவும் வைத்தியர் குறிப்பிட்டார்.
காலவதியான தடுப்பூசிகளை அகற்றுவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.