பாஜக -டிஆர்எஸ் இடையே ஒரு அன்டர்ஸ்டாண்டிங் இருக்கு… ராகுல் ஓபன் டாக்!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டுள்ளார். அலரது இந்த நடைப்பயணம் தற்போது தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தை அடைந்துள்ளது.

காங்கிரஸ் சார்பில் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் இன்று அவர் பேசியது:

பிரதமர் நரேந்திர மோடியும், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவும் நேரடியாக தொலைபேசியில் பேசி கொள்ளும் அளவுக்கு நட்பு பாராட்டி வருபவர்கள்தான். இவர்களை போன்றே, பாஜகவுக்கும், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கும் இடையே மறைமுக தொடர்பு இருந்து வருகிறது.

பாஜக நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் மசோதாக்களை தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆதரிப்பதில் இருந்தே இரு கட்சிகளுக்கும் இடையேயான தொடர்பை மக்கள் அறிந்து கொள்ளலாம். விவசாயிகளுக்கு எதிராக மத்திய பாஜக கொண்டு வந்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் சந்திரசேகர் ராவின் கட்சி ஆதரித்ததே இதற்கு ஆக சிறந்த உதாரணம்.

நாட்டிலேயே டெல்லி தான் மாசு அதிகம் நிறைந்த நகரம் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அதைவிட ஹைதராபாத் மிகவும் மோசம் என்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன் என்று ராகுல் காந்தி பேசினார்.

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ். அத்துடன் தமது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் பெயரை பாரத் ராஷ்ட்ரிய சமிதி என்று அண்மையில் மாற்றி அவர், அதனை தேசிய கட்சியாகவும் அறிவித்துள்ளார். இந்த நிலையில் அவருக்கும், மோடிக்கும் மறைமுக தொடர்பு இருப்பதாக ராதுல் காந்தி பகிரங்கமாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.