இன்று தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனின் பிறந்தநாள் ஐப்பசி சதய நட்சத்திரத்தில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 1037 வது சதய விழா கொண்டாடப்படுகிறது. 2 நாட்கள் வெகு விமர்சியாக கொண்டாடப்படும் இந்த விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இந்த நிலையில் ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழாவை முன்னிட்டு இன்று (நவம்பர் மூன்றாம் தேதி) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.