ஏதென்ஸ், தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸ் தலைநகர் ஏதென்சின் கிழக்கு கடல் பகுதியில், கடும் பேரலைகள் காரணமாக, சமீபத்தில் ஒரு படகு மூழ்கியது. இதில், புலம்பெயர்ந்தவர்கள் ௬௮ பேர் பயணித்தனர்.
உடனே, அப்பகுதிக்குச் சென்ற கிரீஸ் கடற்படையினர், ஐந்து குழந்தைகள், ஆறு பெண்கள் உட்பட மொத்தம் ௨௨ உடல்களை மீட்டனர்; ௧௨ பேரை காப்பாற்றினர். காணாமல்போன ௩௪ பேரை தேடும் பணியில், அந்நாட்டு கடற்படை ஈடுபட்டுள்ளது.
உள்நாட்டில் மோதல் மற்றும் வறுமை காரணமாக, ஆப்ரிக்கா, ஆசியா, மத்திய ஆசியா பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஐரோப்பிய நாடுகளுக்கு கிரீஸ் வழியாக புலம்பெயர்கின்றனர்.
இவ்வாறு புலம்பெயரும் போது, அளவுக்கு அதிகமான நபர்களுடன் செல்லும் சாதாரண படகுகள், கடலில் மூழ்கி விபத்துக்கு உள்ளாகின்றன. இதனால், ஏராளமானோர் உயிரிழக்கின்றனர். கடந்த மாதம் நிகழ்ந்த இரண்டு விபத்துக்களில், ௨௭ பேர் உயிரிழந்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement