மேகன் மார்க்கல் தனது பிரபலமான போட்காஸ்ட நிகழ்ச்சியில் இளவரசி கேட் மிடில்டனை பங்கேற்க அழைப்பி விடுத்துள்ளார்.
மேகன் மார்க்கல் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கிற்கு பிரித்தானியா சென்றபோது இருவரும் இதுகுறித்து பேசியதாக கூறப்படுகிறது.
சசெக்ஸ் இளவரசி மேகன் மார்க்கல் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட வலையொலி (Podcast) நிகழ்ச்சியான ஆர்க்கிடைப்ஸில் (Archetypes) பல பிரபலங்களை சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க செய்துள்ளார்.
ஆனால், மேகன் தனது சிறப்பு விருந்தினர்களின் விருப்பப் பட்டியலில் வெல்ஸ் இளவரசி கேட் மிடில்டனை வைத்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.
சமீபத்தில் மேகன் மார்க்கல் பிரித்தானியாவிற்கு சென்றிருந்தபோது Frogmore விடுதியில் தங்கியிருந்தார். அந்த விடுதி விண்ட்ஸர் கோட்டையில் இருந்து 5 நிமிட தூரத்தில் தான் உள்ளது.
இருவரும் பொதுவெளியில் ஒன்றாக காணப்பட்டாலும், தனிப்பட்டமுறையில் அடிக்கடி தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, மேகன் இளவரசி கேட்டிடம் தனது Archetypes வலையொலி தொடரில் வரவிருக்கும் அத்தியாயத்தில் தோன்றுமாறு ஒரு கோரிக்கையை விடுத்ததாக அரச நிபுணர் Neil Sean கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, முழு அத்தியாயத்தையும் அவருக்கு ஒதுக்கித்தரவும் முன்வந்ததாக கூறப்படுகிறது.
Photo: Getty Images
அந்த நிகழ்ச்சியில், குடும்பம், வேலை மற்றும் இடண்டுக்கும் இடையில் சமநிலை வகிப்பதில் வரும் சிக்கல்கள் பற்றி பேச திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த உரையாடல்களின்போது, இளவரசிகள் இடையிலான உறவில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.