மதுரா, உத்தர பிரதேசத்தில், ஹோட்டல் ஒன்று தீப்பிடித்து எரிந்த விபத்தில், துாங்கிக் கொண்டிருந்த ஊழியர்களில் இருவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்; பலர் காயம்அடைந்தனர்.
உத்தர பிரதேசத்தில், மதுரா மாவட்டத்தில் உள்ள பிருந்தாவன் பகுதியில் இருக்கும் மூன்று மாடி ஹோட்டலின் உணவுப் பொருள் சேமிப்பு அறை நேற்று அதிகாலை திடீரென தீப்பற்றி எரிந்தது.
தகவலறிந்த தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஊழியர்கள் பலர் துாங்கிக் கொண்டிருந்ததால், இருவர் தீயில் சிக்கி உயிரிழந்தனர். காயமடைந்த பலர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
ஹோட்டலில் உள்ள ௨௫ அறைகளிலும் சுற்றுலாப் பயணியர் தங்கியிருந்தனர். அதிர்ஷ்டவசமாக, இப்பகுதியில் எந்த பிரச்னையும் இல்லை. ‘விபத்துக்கு மின் கசிவு அல்லது சிகரெட் துண்டு காரணமாக இருக்கலாம்’ என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement