சென்னைக்கு அருகே வளிமண்டல மேலடுக்கில் உருவாகியுள்ள மேகத்திரலால், சென்னையில் கனமழை பெய்யக்கூடும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னைக்கு அருகே கடல் பகுதியில் உருவான இந்த மழை மேகத்தால், அடுத்து வரக்கூடிய இரண்டு மணி நேரத்திற்கு (நாள் 03.11.2022, நேரம் :9.30 to 10.30 PM) இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் அந்த அறிவிப்பின்படி, அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு சோழிங்கநல்லூர், கிண்டி, வேளச்சேரி, சோளிங்கர், குன்றத்தூர், அமைந்தகரை, எழும்பூர், மாம்பலம், மயிலாப்பூர், புரசைவாக்கம் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வாலாஜாபேட்டை, பொன்னேரி, சோழிங்கநல்லூர், நெமிலி, திருத்தணி, அரக்கோணம், ஸ்ரீ பெரம்பத்தூர், செய்யூர், திருவொற்றியூர், ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.