இலங்கையின் கையில் அவுஸ்திரேலியாவின் உலகக்கோப்பை கனவு!



இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்

ரஷித் கான் 48 (23) ஓட்டங்கள் எடுத்ததுடன், ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்

அவுஸ்திரேலிய அணி மைனஸ் ரன்ரேட்டை கொண்டுள்ளதால் அரையிறுதியில் நுழைய இலங்கை அணியை நம்பியுள்ளது.

அடிலெய்டில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் ஆடிய அவுஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்கள் எடுத்தது. மேக்ஸ்வெல் 54 ஓட்டங்களும், மிட்செல் மார்ஷ் 45 ஓட்டங்களும் எடுத்தனர்.

பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது. ரஷித் கான் 48 ஓட்டங்கள் விளாசினார்.

இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய அணி 7 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை தனது பிரிவில் பிடித்துள்ளது.

ஆனால், ரன்ரேட் மைனஸில் உள்ளதால் அவுஸ்திரேலியா நாளை நடக்கும் இங்கிலாந்து – இலங்கை போட்டியை நம்பியுள்ளது.

அதாவது, நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், இரண்டாவதாக தகுதி பெறும் அணி எது என்பதில் அவுஸ்திரேலியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

இங்கிலாந்து அணி +0.547 ரன்ரேட்டையும் (5 புள்ளிகளுடன்), அவுஸ்திரேலியா -0.173 ரன்ரேட்டையும் வைத்துள்ளன. இதனால் நாளைய போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் அரையிறுதிக்குள் இரண்டாவது அணியாக நுழையும்.

எனவே, இலங்கை அணி வெற்றி பெற்றால் மட்டுமே அவுஸ்திரேலிய அணி உலகக்கோப்பை கனவை எட்ட வாய்ப்புள்ளது. 





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.