அரண்மனை 3 படத்தின் வெற்றிக்கு பின்பு சுந்தர் சி ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், டிடி, ரைசா வில்சன், அமிர்தா ஐயர் மற்றும் மேலும் பலரை வைத்து காபி வித் காதல் என்ற படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பொதுவாக சுந்தர் சி மிகப்பெரிய நடிகர் பட்சாலத்தை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அந்த வரிசையில் காவி வித் காதல் படமும் உருவாகி உள்ளது.
ஜெய், ஸ்ரீகாந்த், ஜீவா 3 பேரும் சகோதரர்கள் இவர்களது அக்காவா டிடி உள்ளார். ஸ்ரீகாந்திற்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. ஜெய் மற்றும் அமிர்தா ஐயர் சிறுவயதில் இருந்து நண்பர்களாக உள்ளனர். ஜீவா ஒரு பெண்ணுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார். ஜீவா மற்றும் ஜெய்க்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்ய அவரது குடும்பம் திட்டமிடுகிறது. இதன் பிறகு என்ன ஆனது என்பதே காபி வித் காதல் படத்தின் கதை.
சுந்தர் சியின் படங்களில் எவ்வளவு நடிகர்கள் இருந்தாலும், அனைவருக்குமே ஈகுவல் ஸ்கிரீன் ஸ்பேஸ் கொடுப்பதில் வல்லவர். அதே போல காபி வித் காதல் படத்திலும் அனைவருக்கும் சரிசமமான காட்சி அமைப்புகள் உள்ளது. ஜீவா மற்றும் ஜெய் என இரண்டு ஹீரோக்களை வைத்து இரண்டு ரசிகர்களுக்கும் பிடித்தார் போல காட்சிகளை வைத்துள்ளார். இது சுந்தர் சியால் மட்டுமே சாத்தியம். படத்தில் உள்ள ஒவ்வொரு பெண் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் உள்ளது. இப்படி ஒரு அக்கா நமக்கு இல்லையே என்ற ஏக்கம் டிடியை பார்க்கும் போது ஏற்படுகிறது.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் எடுபடவில்லை என்றாலும் பின்னணி இசை படத்திற்கு ஏற்றார் போல் உள்ளது. யோகிபாவு மற்றும் கிங்ஸ்லி காமெடியை இன்னும் சில இடங்களில் பயன்படுத்தி இருக்கலாம். எந்த வித லாஜிக்கும் பார்காமால் ஜாலியாக நண்பர்களுடன் சென்று பார்க்கும் வகையில் காபி வித் காதல் படம் உள்ளது.