சந்திர கிரகணம்: நவம்பர் 8 திருப்பதி செல்லத் திட்டமா? தரிசன நேரங்கள், சேவைகள் குறித்த தகவல்கள்!

திருமலை திருப்பதியில் வரும் சந்திரகிரகணத்தை ஒட்டி தரிசன நேரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விளக்கத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

வரும் நவம்பர் 8-ம் தேதி சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது. இதையொட்டி திருமலை திருப்பதியில் குறிப்பிட்ட சில மணி நேரங்கள் நடை மூடியிருக்கும். இந்த ஆண்டு சந்திரகிரகணம் பிற்பகல் 2.39 முதல் மாலை 6.19 வரை நிகழ இருக்கிறது. இதற்காக 8-ம் தேதி காலை 8.40 மணி முதல் நடை சாத்தப்படும். சந்திர கிரகணம் முடிந்த உடன் சிறப்பு சடங்குகள் செய்யப்பட்டு மீண்டும் மாலை 7.20க்கு நடை திறக்கப்படும்.

திருமலை திருப்பதி

அந்த நாளுக்கான விஐபி பிரேக் தரிசனம், ஶ்ரீவாணி அறக்கட்டளை தரிசனம், 300 ரூபாய் சிறப்பு தரிசனம், நேரம் குறிக்கப்பட்ட சர்வ தரிசனம், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித சேவை, சகஸ்ர தீப அலங்கார சேவை உள்ளிட்ட அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று மூத்த குடிமக்களுக்கான தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சந்திர கிரகணம் முடிந்த பிறகு வைகுண்டம் கியூ காம்பிளஸ் – 2 மூலம் இலவச தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கிரகண நேரத்தில் சமையல் செய்யும் வழக்கம் இல்லை என்பதால் சந்திர கிரகணம் முடியும்வரை அன்னபிரசாதக் கூடம் மூடியே இருக்கும்.

திருமலை திருப்பதி

எனவே நவம்பர் 8-ம் தேதி திருமலை திருப்பதி வரும் பக்தர்கள் இவற்றைக் கருத்தில் கொண்டு தங்கள் பயணத்தைத் திட்டமிடுவது நல்லது என்று திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.