திருவண்ணாமலை மாவட்டம் அப்துல்லா புரத்தில் டாஸ்மாக் கடையின் சுவற்றை துளையிட்டு 18 ஆயிரத்து 100 ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
தூசி போலீசார் கடைக்குச் சென்று அங்குள்ள சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்த போது நள்ளிரவு நேரத்தில் முகமூடி அணிந்தவர் கடைக்குள் புகுந்து திருடியது தெரிய வந்தது.
மதுபாட்டிலை திருடியவரால் கல்லாபெட்டியை திறக்க முடியாததால் அதிலிருந்த 1லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம் தப்பியது. சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.