தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றும் 2001 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நிலையை நாடு எதிர்கொண்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (03) நடைபெற்ற உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர்களின் வருடாந்த கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் எழுந்த உலகளாவிய சவால்கள் காரணமாக பல வளர்முக நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், பல நாடுகளில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளாரர்.
மேலும்இ தற்போது அரசாங்கம் பிரபலமான தீர்மானங்களுக்குப் பதிலாக நாட்டின் பொருளாதார நிலைமையை மேம்படுத்தக்கூடிய முடிவுகளை எடுத்துள்ளது.
அத்துடன், இலங்கையின் அதே நிலையிவுள்ள உள்ள பல நாடுகளுடன் ஒப்பிடும் போதுஇ மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் இந்த நாட்டின் உள்நாட்டு வருமானம் மிகவும் குறைவாக உள்ளது. அதே மட்டத்தில் பல நாடுகளில் எரிபொருள் மற்றும் எரிவாயு போன்ற வளங்கள் காணப்படுகின்றன. அதன் காரணமாகஇ அவர்களுக்கு பொருளாதார மந்தநிலையைத் தடுக்க வழிகள்; உள்ளன என்றும் அமைச்சர் கூறியுள்ளார். ஆனால் அவ்வாறான வளங்கள் எமது நாட்டில் இல்லாத காரணத்தினால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலைக்கு மாற்று வழிகள் இல்லை. நாட்டு மக்கள் முகங் கொடுக்கின்ற அழுத்தங்களை தற்போதைய அரசாங்கம் புரிந்துகொண்டுள்ளது. அதிலிருந்து விடுபடுவதற்குஇ உள்நாட்டு; வருமானத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை உயர்வாக கருதுவதாகவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்;.