தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் : சினேகனுக்கு முன் ஜாமீன்

Anticipatory-bail-to-Snehan

நடிகை ஜெயலட்சுமி நான் நடத்தி வரும் சினேகம் அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி பணம் வசூலித்து வருகிறார் என்று பாடலாசிரியர் சினேகன் காவல் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். நான் தனியாக அறக்கட்டளை நடத்தி வருகிறேன். அதன் மூலம் பணம் பல சமூக பணிகளை செய்து வருகிறேன். சினேகன் என் புகழுக்கு களங்கம் விளைவிக்க பொய் புகார் கொடுத்துள்ளதாக ஜெயலட்சுமியும் புகார் கொடுத்தார்.

சினேகன் கொடுத்த புகாரில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சினேகன். அதன்பிறகு கோர்ட் வழிகாட்டுதல்படி ஜெயலட்சுமி மீது திருமங்கலம் போலீசார் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளனர். தற்போது ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில் தன்னை கைது செய்யக்கூடாது என்று முன் ஜாமீன் கேட்டு சினேகன் சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சினேகனுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டதோடு மறு உத்தரவு வரும்வரை சினேகன் திருமங்கலம் காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், சாட்சிகளை கலைக்ககூடாது என்று நிபந்தனையும் விதித்து உத்தரவிட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.