பால் விலை உயர்வு… திமுகவை எச்சரிக்கும் கிருஷ்ணசாமி!

மின்கட்டண உயர்வை கண்டித்தும், மாதம் ஒருமுறை மின்கணக்கீடும் நடைமுறையை அமல்படுத்த வலியுறுத்தியும் புதிய தமிழகம் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

பயங்கரவாதிகளின் கேந்திரமாக கோவை மாறி வருகிறது; சர்வதேச சதிகள் கோவையை மையமாக வைத்து நடைபெற்று வருகின்றன. அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் வருகின்ற 17ஆம் தேதி கோவையில் சமூக நல்லிணக்க பேரணி நடைபெறும். இதில் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்வார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, கொடுத்த வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றவில்லை. தேர்தலின்போது அளித்த மாதந்தோறும் மின் கட்டணம் அளவீடு முறையை அமல்படுத்த திமுக தவறிவிட்டது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று கூறிய திமுக, ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் ஆகியும் பூரண மதுவிலக்கு அமல்படுத்தவில்லை.

திமுக கொடுத்த அனைத்து வாக்குறுதிகளில் இருந்தும் பின்னோக்கி செல்கிறது. பால் விலை உயர்விற்கு திமுக உரிய நேரத்தில் பின்னடைவை சந்திக்கும். திமுக ஆட்சி. நிர்வாகத்தில் தனது தோல்விகளை மறைப்பதற்காக ஆளுநரை விமர்சனத்திற்கு உள்ளாக்குகிறது. திணிக்கப்படாத ஹிந்தியை திணிப்பதாக கூறி போராடுகிறது என்று கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.