மும்பை: மகாராஷ்டிராவில், பொட்டு வைக்காத பெண் பத்திரிகையாளரிடம் சமூக ஆர்வலர் சம்பாஜி பிடே பேச மறுத்துள்ளார். முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உடனான சந்திப்புக்கு பின் பத்திரிகையாளர் கேள்வி கேட்டபோது, பெண் என்பவள் பாரத மாதாவுக்கு நிகரானவள், பொட்டு வைக்காமல் விதவை போல் தோன்றக்கூடாது எனவும் கூறியுள்ளார்.
