மத்திய அரசு அதிரடி முடிவு; அமைச்சர் முருகன் சூப்பர் தகவல்!

மத்திய அமைச்சர் எல்.முருகன் 2 நாள் சுற்றுப்பயணமாக புதுச்சேரி வருகை தந்து உள்ளார். இன்று மதியம் 12 மணிக்கு அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரியில் பிரதமர் கனவு திட்டம் குறித்து கலந்துரையாடினார்.

அப்போது, ‘Modi @ 20: Dreams Meet Delivery’ என்ற புத்தக கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், குடிமைப்பெருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன் குமார், மாநில பாஜக தலைவர் சாமிநாதன் உள்ளிட்ட மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் எல்.முருகன் பேசியதாவது:

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மருத்துவக்கல்லூரி தொடங்க வேண்டும் என மத்திய அரசு முடிவெடுத்து கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 11 மருத்துவக்கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது. மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட படிப்புகளை தங்களது தாய்மொழியில் படிக்க, புதிய கல்விக்கொள்கை வழிவகுத்து இருக்கிறது. இவ்வாறு மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசினார்.

பிறகு, மதியம் 3 மணிக்கு முத்தியால்பேட்டை, சோலை நகர் இளைஞர் விடுதியில் மீனவ சமுதாய மக்களுடன் கலந்துரையாடினார். மாலை 4.30 முதல் 5.30 மணி வரை தலைமை செயலகத்தில் அரசு உயர் அதிகாரிகளுடன் புதுச்சேரி மாநில வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். மத்திய அமைச்சர் வருகையையொட்டி புதுச்சேரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.