மோர்பி பால விபத்தால் குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு பாதிப்பா? -கருத்துக்கணிப்பு சொல்வது இதுதான்!

182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டமன்றத்துக்கு வரும் டிசம்பர் 1, 5 ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகியவற்றுடன் ஆம் ஆத்மி கட்சியும் புதுப்பாய்சசலுடன் களமிற்ங்கி உள்ளதால இத்தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

சில வாரங்களுக்கு முன் வெளியான கருத்துக்கணி்ப்புமுடிவுகள், குஜராத்தில் பாஜகவே மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ளும் என தெரிவித்திருந்தன. அதேசமயம் காங்கிரஸ் தற்போதுள்ள இடங்களைவிட குறைவான தொகுதிகளிலேயே வெல்லும் என்றும், ஆம் ஆத்மி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும் அந்த முடிவுகள் தெரிவித்திருந்தன.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 30) இரவு, குஜராத் மாநிலத்தில் மிகவும் பிரபலமான பழைமையான பாலமான மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 140க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நாடு முழுவதும் இத்துயர சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஊடகவியலாளரை முதல்வர் வேட்பாளராக களமிறங்கும் ஏ.கே… யார் இந்த இசுதான் கத்வி!

சட்டமன்ற தேர்தலுக்கு முன்நிகழ்ந்த இச்சம்பவம் ஆளும் பாஜகவுக்கு அவப்பெயர் ஏற்படுத்துமா, அதன் விளைவாக தேர்தலில் வெற்றிக்கு பாதிப்பு ஏற்படுமா என்றெல்லாம் எண்ணி குஜராத் மாநில பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலக்கம் அடைந்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு தெம்புட்டும் விதமான தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

ஏபிபி-சிவோட்டர் நடத்தி உள்ள தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில், ‘ மோர்பி பால விபத்து, விரைவில் நடைபெறவுள்ள குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது எனவும், பாஜக அங்கு தொடர்ந்து ஏழாவது முறையாக வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், டெல்லி கல்வி மாடல், இலவச அறிவிப்புகள் என அதிரடியாக களமிறங்கி உள்ள ஆம் ஆத்மி கட்சி ஆளும் பாஜக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் என இரு கட்சிகளின் வாக்கு வங்கியிலும் கைவைக்கும் அளவுக்கு இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கருத்துக்கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.