ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார்.
சீனா சென்றுள்ள ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்சுடன் பெய்ஜிங்கில் நடைபெற்ற சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அணு ஆயுதங்களை பயன்படுத்துவதை கூட்டாக எதிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த பயணத்தில் ஜெர்மனியை சேர்ந்த முக்கிய தொழிலதிபர்களும் பிரதமர் ஓலாப் ஸ்கோல்சுடன் சீனா சென்றுள்ளனர்.