கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக லவ் டுடே என்ற படத்தை அவரே எழுதி, இயக்கி, நடித்துள்ளார். டி ஆர் ராஜேந்திரன், ஹிப் ஹாப் தமிழா என இவர்களது வரிசையில் இணைந்துள்ளார் பிரதீப். பாடல்கள் முதற்கொண்டு இவரே எழுதியுள்ளார். லவ் டுடே படத்தின் டிரைலர் வெளியானதிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்த்து அதிகமாக இருந்தது. மேலும் புரமோசன்களுகும் சிறப்பாக அமைந்தது இருந்தது. ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
ஹீரோ பிரதீப் மற்றும் ஹீரோயின் இவானா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டதாக நினைத்துக் கொண்டு உள்ளனர். இவர்களின் காதல் இவானவின் அப்பர் சத்யராஜுக்கு தெரிய வருகிறது. அவர் இருவரையும் அழைத்து இந்த காதலுக்கு சம்மதம் தெரிவிப்பதாகவும், ஆனால் ஒரு நாள் மட்டும் இருவரும் தங்களது மொபைல்களை மாற்றிக் கொள்ளுமாறு சொல்கிறார். இதன் பின் என்ன ஆனது என்பதே லவ் டுடே படத்தின் கதை.
இந்த காலத்து இளைஞர்களுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்பதை நன்கு தெரிந்து கொண்டு இந்த கதையை எழுதியுள்ள பிரதீப். முழுக்க முழுக்க டீன் ஏஜ் பசங்களுக்காக எடுக்கப்பட்ட படம் தான் லவ் டுடே. நடிகராக தனது முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார் பிரதீப், அவருக்கு போட்டியாக கதாநாயகி இவானவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். சத்யராஜ் மற்றும் ராதிகா சரத்குமார் பல இடங்களில் கைதட்டல்களை பெறுகின்றனர்.
காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்களது மொபைல் போன்களை மாற்றி கொண்டால் என்ன என்னால் பிரச்சனை வரும் என்பதை நகைச்சுவை கலந்த சிறந்த திரைக்கதையுடன் அழகாக காட்சி படுத்தி உள்ளார் பிரதீப். எளிதாக வல்கர் காட்சிகளை வைக்க கூடிய இடத்தில் கூட அதனை தவிர்ததற்கு இயக்குனருக்கு பாராட்டுகள். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக உள்ளது. வெறும் காமெடியை மட்டுமே வைத்து கதையை எடுக்காமல், ஒரு நல்ல மெசேஜையும் கொடுத்துள்ளார் பிரதீப். லவ் டுடே – இளைஞர்கள் கொண்டாடும் வெற்றி.