திருவனந்தபுரம்: கேரளாவில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக தீவிரமடைந்து வருகிறது. வரும் 7ம் தேதி வரை கேரளாவின் வட மாவட்டங்கள் தவிர ஏனைய பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி இன்று திருவனந்தபுரம், கொல்லம், பாலக்காடு உள்பட 10 மாவட்டங்களுக்கும், நாளை திருவனந்தபுரம், கொல்லம், திருச்சூர் உள்பட 10 மாவட்டங்களுக்கும், 6ம் தேதி பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி உள்பட 9 மாவட்டங்களுக்கும், 7ம் தேதி இடுக்கி, எர்ணாகுளம், மலப்புரம் மற்றும் வயநாடு ஆகிய 4 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.