
உக்ரைன்மீது ரஷ்யா நடத்தும் தாக்குதலால், நாற்பது லட்சம் பேர் மின்சாரம் இல்லாமல் தவிப்பதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி வேதனை.

பிளாக் பாந்தர் வகான்டா ஃபாரெவெர் படத்தின் நட்சத்திரங்கள் லண்டனில் நடக்கும் ஐரோப்பிய ப்ரிமியரில் பங்கேற்பு.

போப் ஃபிரான்ஸிஸ் தனது வளைகுடா நாடுகள் பயணத்தின் ஓர் அங்கமாக பஹ்ரைன் சென்றிருக்கிறார்.

புதின் பங்கேற்றால், காலநிலை மாநாட்டில் தான் பங்கேற்கப் போவதில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார்.

தென் கொரியாவில் ஹாலோவீன் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

காலநிலை மாற்றத்தால் 2050-க்குள் கிளிமஞ்சாரோவிலுள்ள பனிப்பாறைகள் முற்றிலுமாக உருகும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக ஐ.நா கூறியிருக்கிறது.

ஏவியன் காய்ச்சல் பரவலால் இங்கிலாந்தில் தடுப்பு நடவடிக்கையாக ஏராளமான வான்கோழிகள் கொன்று அழிக்கப்பட்டன.

18,000 பேருக்கு மேல் பங்குபெறும் ஷாங்காய் மாரத்தான் நவம்பர் 27-ம் தேதி நடைபெறவிருக்கிறது.

எலான் மஸ்க் வசம் ட்விட்டர் சென்ற பிறகு ஆட்குறைப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கான நடவடிக்கைகள் தொடங்கியிருக்கின்றன. இந்தியாவில் ட்விட்டரில் பணிபுரிபவர்களுக்கு அதற்கான ஆட்குறைப்பு மெயில் வரத் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.