Whatsappல் தெரியாமல் கூட இந்த வேலையை செய்து விடாதீர்கள்! மீறினால் தலைவலி தான்


வாட்ஸ் அப் பயன்படுத்துவோர் எச்சரிக்கை.

முன்பின் தெரியாத எண்களில் இருந்து வரும் லிங்க்குகளை க்ளிக் செய்ய வேண்டாம்.

உலகம் முழுவதும் பல கோடி மக்களால் வாட்ஸ் அப் செயலி உபயோகப்படுத்தப்படுகிறது.
சமீபகாலமாக வாட்ஸ் அப் மூலம் ஒரு மோசடி உலகளவில் அதிகம் நடக்கிறது.
அதன்படி, ஸ்பேம் மற்றும் ஃபிஷிங் இணைப்புகள் மூலம் வாட்ஸ்அப்பில் மோசடி செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

பல ஹேக்கர்கள் விழா காலங்களில் சலுகைகள் தொடர்பாக லிங்குகளை வாட்ஸ்அப் மூலம் நண்பர்கள், தொடர்பில் இருக்கும் குழுவினருக்கு அனுப்புகிறார்கள். அந்த லிங்குகளில் விலையுயர்ந்த பரிசுகள் இருப்பதாக கூறப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், மக்கள் பேராசை கொண்டு இந்த இணைப்புகளை கிளிக் செய்கிறார்கள்.

இங்கு தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், லிங்குகளைக் கிளிக் செய்த பிறகு, அவர்களின் ஸ்மார்ட்போனில் வேறு இணையதளம் திறக்கப்படும் அல்லது அப்போதே போன் ஹேக் செய்யப்படும்.

Whatsappல் தெரியாமல் கூட இந்த வேலையை செய்து விடாதீர்கள்! மீறினால் தலைவலி தான் | Whatsapp Safety Hacking Tamil Technology

indiatoday

பின்னர் இங்கு அவர்களின் வங்கியின் தேவையான விவரங்கள் கேட்கப்படுகின்றன.

பேராசையில், மக்கள் இந்த முக்கியமான விவரங்களை நிரப்புகிறார்கள். பின்னர் ஹேக்கர்கள் கைவரிசையை காட்டிவிடுகின்றனர்.

இதேபோல் பல WhatsApp பயனர்களை குறிவைத்து ஹேக்கர்கள் மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர்.

இது போன்ற தெரியாத எண்களில் இருந்து லிங்க்குகள் வந்தால் அதை கிளிக் செய்து ஓபன் செய்ய வேண்டாம்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.