படையை நடுங்கச் செய்யும் பாம்பிற்கும் நட்பு, பிரிவின் வலி உண்டு.
சேலம் காடையாம்பட்டியில் விவசாயி பிரபாகரன் தனது பூந்தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது குழாயில் இருந்த இரண்டு பாம்புகள் பண்ணைக் குட்டையில் விழுந்தது.
அவைகள் ஒன்றுக்கொன்று பிணைந்து விளையாடிய நிலையில் சாரைப்பாம்பு மயக்கமுற்று தண்ணீருக்குள் இறந்தது.
ஆனால், உடனிருந்த நல்ல பாம்போ தனது நட்பு பிரிந்த நிலையில் அந்த இடத்தை விட்டு நகராமல் இறந்த பாம்பையே பார்த்துக் கொண்டிருந்தது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் நல்ல பாம்பை மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.