வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பணஜி: சோனாலி போகத் மரணம் குறித்து கோவாவில் தனியார் ரெஸ்டாரண்ட் உரிமையாளரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹரியானாவை சேர்ந்த நடிகை சோனாலி போகத், 42 பா.ஜ.,வின் முக்கிய பிரமுகரான இவர் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக செயல்பட்டு வந்தார். , கடந்த சில மாதங்களுக்கு முன் கோவா சென்றிருந்த போது அங்கு விடுதி ஒன்றின் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். கோவா போலீசார் நடத்திய விசாரணையில், சோனாலியின் உதவியாளர்கள், அவருக்கு பானத்தில் எதையோ கலந்து குடிக்கக் கொடுத்தது வீடியோ ஆதாரத்துடன் தெரியவந்தது. கோவா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
![]() |
சோனாலி போகத் மரண வழக்கை கோவா போலீசார் சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து சி.பி.ஐ., விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் சோனாலி போகத் மர்மாக மரணமடைந்த தனியார் ரெஸ்டாரண்ட் உரிமையாளர் எட்வின் நுான்ஸ் என்பவரை மீண்டும் கைது செய்து விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்ப்டடார். தற்போது இவர் மீண்டும் கைதாகியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement