குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலை வாய்ப்பு – முழு விவரம்

தமிழ்நாடு அரசு சமூகப்பாதுகாப்புத்துறையின்‌ கீழ்‌ இயங்கும்‌ வாட்சாலயா வழிகாட்டுதல்‌ நெறிமுறைகளின்‌படி மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராக கொண்டு இயங்கி வரும்‌, அரியலூர்‌ மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலகு அலுவலகத்திற்கு ஆற்றுப்படுத்துநர்‌ பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 

பாதுகாப்பு அலுவலக காலிப் பணியிடங்கள்:

ஆற்றுப்படுத்துநர்‌ எனப்படும் Counsellor பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Counsellor வயது வரம்பு:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அரியலூர் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 01-07-2022 தேதியின்படி 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஆற்றுப்படுத்துநர்‌ மாத சம்பளம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவருக்கு மாதம் ரூ.40,000 சம்பளம் வழங்கப்பட உள்ளது.

கல்வி தகுதி:

அரியலூர்‌ மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி / முதுநிலை பட்டதாரிகள்‌ (10+2+ 3 Pattern) (உளவியல்‌, சமூகவியல்‌, சமூகப்பணி, பொது சுகாதாரம்‌, வழிகாட்டுதல்‌ மற்றும்‌ ஆற்றுப்படுத்துதல்‌) படிப்பு முடித்தவர்களாக இருத்தல்‌ வேண்டும்‌. அல்லது முதுநிலை பட்டயப்படிப்பு பட்டம்‌ பெற்றிருக்க வேண்டும்‌.

மேலும்‌ குழந்தைகள்‌ சார்ந்த ஆற்றுப்படுத்துதல்‌ பணியில்‌ 1 ஆண்டு (தொண்டு நிறுவனங்கள்‌, பள்ளிகள்‌, மருத்துவமனைகள்‌ மற்றும்‌ குழந்தைகள்‌ இல்லங்கள்‌) முன்‌ அனுபவம்‌ பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தை‌ https://ariyalur.nic.in என்ற மாவட்ட இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌. பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை நவம்பர் 21ஆம் தேதி அன்று மாலை 05.00 மணிக்குள்‌ மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலகு, இரண்டாவது தளம்‌, அரசு பல்துறை வளாகம்‌, ஜெயங்கொண்டம்‌ சாலை, அரியலூர்‌ – 621 704 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.