நைரோபி : கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில், ஒரு சிறிய பயணியர் விமானம் நேற்று விபத்துக்குள்ளாகி, ஏரிக்குள் விழுந்ததில், 19 பேர் உயிரிழந்தனர்.
தான்சானியாவின் பிரிசிசன் விமானம், தார் ஏ சலாம் கடற்கரை நகரில் இருந்து ௪5 பயணியர் மற்றும் ஊழியர்களுடன், புகோபா நகரை நோக்கி நேற்று காலை புறப்பட்டது.
விமானம் புகோபாவுக்கு அருகே 328 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த போது, விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
மேலும், மோசமான வானிலை மற்றும் மழை பெய்து கொண்டிருந்ததால், விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி அருகில் உள்ள விக்டோரியா ஏரிக்குள் விழுந்து மூழ்கியது.
‘இதில், 19 பயணியர் உயிரிழந்தனர்; ௨௬ பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்’ என, போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement