உலகம் முழுவதும் நாளை பிற்பகல் 2.39 மணி முதல் 6.19 வரை சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. இந்த சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாளை நடை சாற்றப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- “உலகம் முழூவதும் நாளை மதியம் 2.39 மணி முதல் தொடங்கி மாலை 6.19 மணி வரை சந்திரகிரகணம் நிகழ்கிறது. அன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காலை 9.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமி பலகனி கதவுகள் அடைக்கப்பட்டு நடை சாத்தப்பட்டு இருக்கும்.
மேலும், அன்றைய தினம் நடைபெற உள்ள அன்னாபிஷேகம் காலை 7 மணிக்கு நடைபெறும். இரவு 7.30 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதுமட்டுமில்லாமல், மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த 22 உபகோவில்களில் இதே நேரத்தில் நடை சாத்தப்படும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.