சர்க்கரை நோயாளிகள் இளநீர் குடிக்கலாமா?


சர்க்கரை நோயாளிகள் இளநீர் அருந்தலாமா என்ற கேள்வி பலருக்கு இருக்கிறது.

அவர்கள் இளநீர் குடிக்கலாம் என்பதே அதற்கான பதில்.

இயற்கை தந்த அருட்கொடைகளில் இளநீரும் ஒன்றாகும்.

இதில் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் ஒளிந்துள்ளது.
இதில் பொட்டாசியம், சோடியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்றவை உடலுக்கு கிடைக்கின்றன.

சர்க்கரை நோயாளிகள் இளநீர் குடிக்கலாமா? | Sugar Patients Diabetes Coconut Water Tamil

punjabkesari

இளநீர் குடிப்பதால், உடலில் உள்ள நச்சுகள் வெளியேறி, பல நோய்களின் அபாயம் தவிர்க்கப்படுகிறது.
இருப்பினும் இதனை சர்க்கரை நோயாளிகள் அருந்தலாமா? கூடாதா என்ற சந்தேகம் காணப்படும். தற்போது அதனை பார்ப்போம்.

சர்க்கரை நோயாளிகள் இளநீர் குடிக்கலாமா?

நீரிழிவு நோயாளிகள் இளநீரை குடிக்கலாம். இந்த பானத்தை தினமும் கூட குடிக்கலாம்.
ஏனெனில் இது அவர்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

இது இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. மற்றும் அதன் கிளைசெமிக் இன்டெக்ஸ் (GI) குறைவாக உள்ளது .
இளநீரில் உள்ள மெக்னீசியம் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகிறது.

இளநீரைக் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து அதிகரிப்பதுடன், அற்புத சக்தியும் கிடைக்கும்.
எனவே இளநீரை சர்க்கரை நோயாளிகள் தாராளமாக அருந்தலாம்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.