டுவிட்டரை எலன் மஸ்க் கையக்கப்படுத்திய பின்னர் அங்கு ஆட்குறைப்பை அதிரடியாக செய்து வரும் நிலையில் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவும், ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
சுமார் 87 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றும் மெட்டா நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம், கடந்த ஆண்டை காட்டிலும் 52 சதவீதம் குறைந்து, 4.4 பில்லியன் அமெரிக்க டாலராக சரிந்தது.
மேலும், அந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 600 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்த நிலையில், அதன் பங்கு விலையும் ஒரே நாளில் 25 சதவீத சரிவை கண்டது.
இதனைதொடர்ந்து, மெட்டாவில் பணி நியமனத்தை நிறுத்தி வைத்த அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் பணியாற்றும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது