வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: ‘பாரத் ஜோடோ’ யாத்திரையின் போது கேஜிஎப்-2 படப்பாடலை, அனுமதியின்றி பயன்படுத்தியதாக காங்., எம்.பி., ராகுல், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் மீது தொடர்ந்த வழக்கில் காங். கட்சி மற்றும் பாராத் ஜோடோ யாத்திரை ஆகிய டுவிட்டர் கணக்குகளை தற்காலிகமாக முடக்குமாறு பெங்களூரு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.பி., ராகுல், தமிழகத்தின் கன்னியாகுமரியிலிருந்து ‘பாரத் ஜோடோ’ என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரையின் போது கேஜிஎப்- 2 படப்பாடலை அனுமதியின்றி பயன்படுத்தி வீடியோவாக தயாரித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியது.
![]() |
இது தொடர்பாக எம்ஆர்டி மியூசிக் நிறுவனம் தங்கள் அனுமதியின்றி பாடப்பாடலை பயன்படுத்தியதாக ராகுல், ஜெய்ராம் ரமேஷ், உள்ளிட்டோர் மீது அளித்த புகாரில், தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ன் கீழ் 403 565, 120 ஆகிய பிரிவுகளின் கீழும், 1957 ம் ஆண்டு காப்புரிமை சட்டம் 63ன் கீழும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் இன்று நடந்த விசாரணையில், காங். கட்சி, பாரத் ஜோடோ யாத்திரை ஆகிய இரு டுவிட்டர் கணக்குகளை தற்காலிகமாக முடக்கி வைக்க வேண்டும் என டுவிட்டர் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement